சிறுமுகை மகாசக்தி மாரியம்மன் கோவிலில் சிறப்பு சண்டி ஹோமம்
ADDED :10 hours ago
சிறுமுகை: சிறுமுகை அருகே உள்ள ரேயான்நகர் அருள்மிகு மகாசக்தி மாரியம்மன் திருக்கோவிலின் 4-ம் ஆண்டு திருவிழாவையொட்டி சிறப்பு சண்டி ஹோமம் மற்றும் அம்மன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதிகாலை முதலே பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு ஹோமத்தில் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து பல்வேறு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றதுடன், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திருவிழாவின் முக்கிய நிகழ்வின் ஒருபகுதியாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, நேர்த்திக்கடன் செலுத்துதல் மற்றும் மாவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் விழா குழுவினர் செய்திருந்தனர்.