உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரவிசங்கர் குருஜியின் 70 வது பிறந்தநாள் கொண்டாட்டம்; குவியும் பக்தர்கள்

ரவிசங்கர் குருஜியின் 70 வது பிறந்தநாள் கொண்டாட்டம்; குவியும் பக்தர்கள்

பெங்களூரு: கனகபுரா சாலையில் உள்ள, சர்வதேச வாழும் கலை மையத்தில் அதன் 45 வது ஆண்டு விழா மற்றும் ரவிசங்கர் குருஜியின் 70 வது பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பான நிகழ்ச்சிகள் தினமும் அரங்கேறி வருகிறது. உலகெங்கிலும் வசிக்கும் ரவிசங்கர் குருஜியின் பக்தர்கள், சர்வதேச வாழும் கலை மையத்திற்கு படையெடுத்து வருகின்றனர்.

‘உலக அமைதிக்காக குருதேவுடன் இணைந்து உலகம் தியானிக்கிறது’ என்ற பெயரில், புதிதாக கட்டுப்பட்டு உள்ள தியான மண்டபத்தில் நேற்று தியான நிகழ்ச்சி நடந்தது. இதில் 14 நாடுகளில் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். ஆன்லைன் மூலமும் லட்சக்கணக்கான பக்தர்கள் இணைந்தனர். பக்தர்கள் திரண்டதால், வாழும் கலை மையத்தின் சூழல் கண்ணுக்கு எட்டிய துாரம் வரை மகிழ்ச்சி, இசை, பக்தி, ஆழ்ந்த ஒற்றுமை உணர்வால் நிரம்பி வழிந்ததை காண முடிந்தது. மத்திய தொழிலாளர் நல இணை அமைச்சர் ஷோபா, இண்டோ ஆங்கிலேய திருச்சபை செபி மறைமாவட்ட பேராயர் டாக்டர் மார்வின் மேத்யூ, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, இழப்பீடுகளுக்கான ஜனாதிபதியின் சிறப்பு துாதர்கள் எக்வோ ஸ்பியோ, அரமன்சா என்டெஷி ஆகியோர் நிகழ்ச்சியில கலந்து கொண்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். வாழ்க்கையை கொண்டாட்டமாக மாற்றுவது, மனித விழுமியங்கள், கருணை மற்றும் அமைதியை அடிப்படையாக கொண்ட சமூகத்தை உருவாக்குவது ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில், தியானம் அரங்கேறியது. இந்நிகழ்ச்சியில் வாழும் கலை மையத்தின் இலவச பள்ளிகளை சேர்ந்த 150 குழந்தைகள் வழங்கிய கலைநிகழ்ச்சி, பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது. கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆலமரம், அரசமரம், வேப்பமரம், மாமரம், அத்திமரத்திற்கு, ரவிசங்கர் குருஜி புனித நீர் ஊற்றினார்.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரினசம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !