இன்று அபரா ஏகாதசி விரதம்: பெருமாளை வழிபட எல்லையற்ற பலன், புகழ் கிடைக்கும்!
ஏகாதசி விரதம் மகாவிஷ்ணுவிற்கு உகந்த மிக முக்கிய விரதமாகும். அபரா ஏகாதசி நாளில் மகாவிஷ்ணுவை திரிவிக்கிரம ரூபத்தில் வழிபட வேண்டும். இன்று கோவிந்த நாமம் சொல்லி பெருமாளை வழிபட கோடி புண்ணியம் கிடைக்கும்
இந்த அபரா ஏகாதசி ஏகாதசியைஅசலா ஏகாதசி என்றும் அழைப்பர். இந்த ஏகாதசி விரதத்தினால் ஒருவர் மக்கள் மத்தியில் பெரும் பேரும், புகழும் அடைவதோடு, அளவில்லா செல்வத்தையும் பெறுவர் என்று ஞான நூல்கள் கூறுகின்றன. விஷ்ணுவின் அம்சமாகத் தோன்றிய சக்தியே ஏகாதசி. ஏகாதசி என்று சொன்னாலே பாவம் தீரும் என்றால், பெருமாளை வழிபட எவ்வளவு புண்ணியம் சேரும்..! பெருமாள் மந்திரம், விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பது நல்ல பலன் தரும். கோயிலுக்குச் செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே விளக்கேற்றி வழிபடலாம். விஷ்ணு சகஸ்ரநாமம் அல்லது மகாவிஷ்ணுவின் நாமங்களை உச்சரிப்பது நல்லது. இன்று அபரா ஏகாதசியில் பெருமாளை வழிபட்டு விஷ்ணுவின் அருளை பெறுவோம்.!