விநாயகர் கோவிலுக்கு மழை வேண்டி 108 தீர்த்தக் குட வழிபாடு
ADDED :31 minutes ago
அன்னூர்: பச்சாகவுண்டனூரில், மழை வேண்டி, 108 தீர்த்தக் குட அபிஷேகம் நடந்தது. அக்கரை செங்கப்பள்ளி வட்டாரத்தில், கடந்த இரண்டரை மாதங்களாக மழை இல்லை. பயிர்கள் காய்கின்றன. நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டது. இதையடுத்து பச்சாகவுண்டனூரில் உள்ள விநாயகர் கோவிலுக்கு, நேற்று முன்தினம் காலை கன்னிப்பெண்கள் மற்றும் குழந்தைகள், 108 தீர்த்த குடம் எடுத்து அபிஷேகம் செய்தனர். விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் சுற்று வட்டார பொதுமக்கள் பங்கேற்றனர். இதையடுத்து மாலையில் மழை பெய்ததால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.