சின்னாரியபட்டி மாரியம்மன் கோவில் பொங்கல் விழா துவங்கியது
பொங்கலூர்: பொங்கலூர் சின்னாரியபட்டி மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த ஏப்ரல் 28 ல் பூ பொரி சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து புண்ணிய வாசனை, குட்டைக்கு அரிசி மாற்றுதல் நடந்தது. மே 5ல் பொட்டு சாமி பொங்கல், மா விளக்கு, புண்ணிய வாசனை, சுவாமி அழைத்தல், சக்தி கும்பம் ஆலயம் வருதல், கம்பம் ஆலயம் வருதல், பூவோடு கம்பத்தில் வைத்தல் ஆகியன நடந்தது. நேற்று விநாயகர் பொங்கல், சிறப்பு குத்துவிளக்கு பூஜை, மாவிளக்கு எடுத்தல் ஆகியன நடந்தது. அன்னதானம், விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று காலை, 10:00 மணிக்கு பட்டத்தரசி அம்மன் ஆலயம் வருதல், 1:00 மணிக்கு குதிரை எடுத்தல், 3:00 மணிக்கு மீனாட்சி வலசு செங்குந்த முதலியார் அலகு தேர் ஆலயம் வருதல், 4:00 மணிக்கு தீர்த்தம் எடுத்து வருதல், இரவு, 7:00 மணிக்கு பெரிய பூஜை, அபிஷேக ஆராதனை, 8:00 மணிக்கு சக்தி கும்பம் கங்கை சேர்தல், 9:00 மணிக்கு கம்பம் கங்கை சேர்த்தல் நடக்கிறது. நாளை மறுநாள் வியாழக்கிழமை காலை, 10 :30 மணிக்கு மஞ்சள் நீர் பூஜை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கண்டியன் கோவில் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.