வானுார் வர்ணமுத்து மாரியம்மன் கோவில் செடல் உற்சவ விழா
ADDED :153 days ago
வானுார்: வானுார் அடுத்த பாப்பாஞ்சாவடி கிராமத்தில் வர்ணமுத்து மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு செடல் உற்சவம் நடந்தது. விழா கடந்த 4ம் தேதி விநாயகர் பூஜையுடனும், 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 8ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை இரவு மின் அலங்காரத்துடன் அம்மன் வீதியுலா நடந்தது. நேற்று காலை 10;00 மணிக்கு, அம்மன் கரக வீதியுலாவும், கூழ் வார்த்தலும் நடந்தது. மாலை 6;00 மணிக்கு, செடல் உற்சவ விழா நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள், வேன், கார் உள்ளிட்ட வாகனங்கள் இழுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக் கடன் செலுத்தினர். விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் மற்றும் விழாகுழுவினர் செய்திருந்தனர்.