உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கத்தில் வெள்ளிக் குதிரை வாகனத்தில் நம்பெருமாள்: வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கும் தரிசனம்

ஸ்ரீரங்கத்தில் வெள்ளிக் குதிரை வாகனத்தில் நம்பெருமாள்: வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கும் தரிசனம்

திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் சித்திரைத்தேர் உத்ஸவம் விருப்பன் திருநாள் விழாவில் வருடத்திற்கு ஒருமுறை மட்டும் நிகழும் வெள்ளிக் குதிரை வாகனத்தில் நம்பெருமாள் வலம் வரும் வைபவம் நடைபெற்றது.


பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை விருப்பன்திருநாள் எனப்படும் சித்திரைதேர் உற்சவம் 11 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். விழாவின் எட்டாம் நாள் உற்சவர் நம்பெருமாள் "வருடத்திற்கு ஒரு முறை நிகழும்" வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை மே 14ம் தேதி காலை நடைபெறுகிறது.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !