உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலத்தில் கிருத்திகை விழா

மயிலத்தில் கிருத்திகை விழா

மயிலம்: மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமி கோயிலில் கிருத்திகை விழா நடந்தது.

கிருத்திகை விழாவை முன்னிட்டு நேற்று காலை 6:00 மணிக்கு கோயில் வளாகத்திலுள்ள பாலசித்தர், விநாயகர், வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர், நவகிரக சுவாமிகளுக்கு அபிஷேகம், வழிபாடு நடந்தது. காலை 11:00 மணிக்கு பால், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம் பன்னீர் போன்ற நறுமண பொருட்களினால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இரவு 8:00 மணிக்கு உற்சவர் சிறப்பு மலர் அலங்காரத்தில் மலை வலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதினம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !