உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விளாச்சேரியில் தயாராகும் கிருஷ்ணர் சிலைகள்

விளாச்சேரியில் தயாராகும் கிருஷ்ணர் சிலைகள்

திருநகர்: விளாச்சேரியில் கிருஷ்ண ஜெயந்திக்காக கிருஷ்ணர் சிலைகள் தயாரிக்கும் பணி நடக்கிறது.


அங்கு 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பொம்மை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். சீசனுக்கு தகுந்தாற்போல் சுவாமி சிலைகள், அரசியல் தலைவர்களின் சிலைகள், மூன்று இஞ்ச் முதல் 10 அடி உயரம்வரை விநாயகர் சிலைகள் மற்றும் இரண்டரை அடி உயர மெகா சைஸ் அகல் விளக்குகள், கிறிஸ்து குடில்கள் ஆகியவற்றை களிமண், காகிதக் கூழ், பிளாஸ்டர் ஆப் பாரிஸ், சிமென்டில் தயாரிக்கின்றனர்.  


கவுரி சங்கர் கூறுகையில், பரம்பரை பரம்பரையாக பொம்மைகள் தயாரிக்கும் தொழிலில் குடும்பத்துடன் ஈடுபட்டு வருகிறோம். கிருஷ்ண ஜெயந்தி விழாவிற்காக வழக்கமாக தயாரிக்கும் கிருஷ்ணர் சிலைகளுடன் இந்த ஆண்டு கிருஷ்ணர் செட்டுகள் தயாரிக்கிறோம். 3 இன்ச் உயரம் முதல் ஒன்றரை அடி உயரம் வரை களிமண்ணால் கிருஷ்ணர் சிலைகள் தயாரிக்கிறோம். சுற்றுச் சூழலை கருத்தில் கொண்டு களிமண்ணால் மட்டுமே சிலைகள் தயாரிக்கிறோம். வீட்டு அலங்காரத்திற்காக பிளாஸ்டர் ஆப் பாரிசில் தயாரித்து கொடுக்கிறோம்‌.  தமிழகத்தின் பெரும்பாலான கோயில்கள், காதி விற்பனையகங்களில் இங்கு தயாராகும் சிலைகள் விற்பனைக்கு செல்கின்றன. வெளி மாநிலத்தினரின் ஆர்டரின் பேரிலும் தயாரித்து கொடுக்கிறோம். சில நாட்களாக மழை பெய்வதால் பொம்மைகளை சுட வைப்பதிலும், பெயிண்ட் அடிப்பதிலும் சிரமம் ஏற்படுகிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !