காஞ்சி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆந்திராவில் விஜய யாத்திரை
குண்டூர்: பூஜ்யஸ்ரீ சங்கராச்சாரியார் சுவாமிஜி இன்று நெல்லூருக்கு வருகை தந்தார். விஜயேந்திர சரஸ்வதிசங்கராச்சாரியார் சுவாமிகளுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று 18ம் தேதி 25 மே 25ம் தேதி வரை ஆந்திரா மாநிலத்தில் யாத்திரை மேற்கொள்ளவுள்ளார். இதனை முன்னிட்டு இன்று காலை விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் காலை காஞ்சிபுரத்தில் இருந்து ஆந்திரா மாநிலம் முலாபெட்டாவில் உள்ள ஸ்ரீ சங்கர மடத்தை வந்தடைந்தார். அவருக்கு சிறப்பபு வரவேற்பு அளிக்கப்பட்டது. அனுஷ்டானத்திற்குப் பிறகு, நெல்லூர் சங்கர மடத்தில் பூஜ்ய சுவாமிகள் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். தொடர்ந்து மாலை 4 4 மணியளவில் குண்டூர், கொளனுகொண்டா, தடேபள்ளி அருகே உள்ள சங்கர மடம் முகாமில் ஆசி வழங்கினார்.