பிளேக் மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவ விழா
ADDED :1 days ago
கருமத்தம்பட்டி: க.ராயர்பாளையம் பிளேக் மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவ திருவிழா நேற்று நடந்தது.
கருமத்தம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட ராயர்பாளையத்தில் உள்ள பிளேக் மாரியம்மன் கோவில் பழமையானது. இங்கு, கடந்த, 12 ம்தேதி காலை பூச்சாட்டுதலுடன் கல்யாண உற்சவ திருவிழா துவங்கியது. 19 ம்தேதி காப்பு கட்டுதல், நகை சீர் கொண்டு வருதல், அம்மை அழைத்தல் மற்றும் திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. நேற்று அதிகாலை மாவிளக்கு பூஜை, அம்மனுக்கு பொங்கல் வைத்தல் மற்றும் சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தன. பக்தர்கள் முளைப்பாரி எடுத்து வந்து வழிபட்டனர். இன்று மஞ்சள் நீராட்டும், நாளை மறு பூஜையும் நடக்கிறது.