உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி பெரியாவுடையார் கோயிலில் வருடாபிஷேகம்; யாக பூஜை

பழநி பெரியாவுடையார் கோயிலில் வருடாபிஷேகம்; யாக பூஜை

பழநி: பழநி பெரியாவுடையார் கோயில் வருடாபிஷேகத்தை முன்னிட்டு யாக பூஜை நடைபெற்றது.


பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள உபகோவிலான கோதைமங்கலம், பெரியாவுடையார் கோயிலில் நேற்று (மே.20) வருடாபிஷேகம் நடைபெற்றது.அதில் சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க வேள்வி நடைபெற்றது. யாகத்தில் வைக்கப்பட்ட கலச நீர் கோயில் வளாகத்தில் சுற்றி எடுத்து வரப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பெரியாவுடையார் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !