கோபால்பட்டி காளியம்மன் கோவில் திருவிழா
ADDED :1 days ago
கோபால்பட்டி; கோபால்பட்டி காளியம்மன் கோவில் திருவிழாவில் தீச்சட்டி எடுத்து ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவையொட்டி மே.12 சாமி சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து நேற்று மங்கம்பட்டி விநாயகர் கோவிலில் பொங்கல் வைத்தல், அம்மன் அலங்காரம் ஜோடித்தல், தீச்சட்டி, பால்குடம், பறவைகாவடி, கரும்பு தொட்டில் மாவிளக்கு எடுத்து, கிடாய் வெட்டி பொங்கல் வைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று அம்மன் மஞ்சள் நீராட்டுடன் பூஞ்சோலை செல்லும் நிகழ்வு நடக்கும்.