உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரம்ம குண்டத்தில் ஆக்கிரமிப்பில் கட்டப்பட்ட ஓம் சக்தி கோவில் இடிப்பு

பிரம்ம குண்டத்தில் ஆக்கிரமிப்பில் கட்டப்பட்ட ஓம் சக்தி கோவில் இடிப்பு

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள பிரம்ம குண்டத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டிருந்த ஓம் சக்தி கோவில் அதிகாரிகள் முன்னிலையில் இடிக்கப்பட்டனர்.


மூங்கில்துறைப்பட்டு அடுத்த பிரம்ம குண்டத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தில் அரசு அனுமதி இன்றி கட்டப்பட்ட ஓம் சக்தி கோவிலை உயர் நீதிமன்றம் உத்தரவின் பேரில் நேற்று தாசில்தார் வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் முன்னிலையில் கோவிலை அகற்றும் பணி நடைபெற்றது.அதேபோல் அதன் அருகே கட்டப்பட்ட கடைகளையும் ஜேசிபி இயந்திரம் மூலம் இடிக்கப்பட்டனர்.அப்பொழுது வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன் கிராம நிர்வாக அலுவலர் இதயத்துல்லா, சப் இன்ஸ்பெக்டர் சிவன்யா ஆகியோர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !