உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஊத்துக்கோட்டை வீர ஆஞ்சநேயர் கோவிலில் தீமிதி திருவிழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்

ஊத்துக்கோட்டை வீர ஆஞ்சநேயர் கோவிலில் தீமிதி திருவிழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்

ஊத்துக்கோட்டை: வீர ஆஞ்சநேயர் கோவிலில் நடந்த தீமிதி திருவிழாவில், திரளான பக்தர்கள் காப்பு கட்டி தீமிதித்தனர். 


ஊத்துக்கோட்டை அடுத்த, பென்னலுார்பேட்டை அடுத்த, வெலமகண்டிகை வீர ஆஞ்சநேய சுவாமி கோவிலில், கடந்த 12.ம் தேதி பிரம்மோற்சவ விழா தொடங்கியது. ஒவ்வொரு நாளும், காலை, 7:00 மணிக்கு அபிஷேகம், 9:00 – 10:00 மணிக்கு சகஸ்ர நாம பாராயணம், காலை 10:00 – மதியம் 2:00 மணிக்கு பஜனை, மதியம், 2:00 – மாலை 6:00 வரை அரிகதா கான நிகழ்ச்சி நடைபெறும். நேற்று இரவு தீமிதி திருவிழா நடந்தது. இதில், வெலமகண்டிகை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, 500க்கும் மேற்பட்டவர்கள் காப்பு கட்டி தீ மிதித்தனர். இரவு, உற்சவர் ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !