உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்ஸவ கொடியேற்றம்

வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்ஸவ கொடியேற்றம்

பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்ஸவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.


எமனேஸ்வரம் சவுராஷ்டிரா சபைக்கு பாத்தியமான பெருந்தேவி தாயார் வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. கோயிலில் 224வது வைகாசி பிரம்மோற்ஸவ விழாவில் நேற்று முன் தினம் இரவு காப்பு கட்டப்பட்டது. நேற்று காலை 9:30 மணிக்கு கோயில் கொடி மரத்தில் கருட கொடி ஏற்றபட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு பெருமாள் ஏகாந்த சேவையில் அன்ன வாகனத்தில் வீதி வலம் வந்தார். தினமும் காலை ரெங்க மன்னார், ராமர், காளிங்க நர்த்தனம், கண்ணன், கீதா உபதேசம் உள்ளிட்ட திருக்கோலங்களில் பல்லக்கில் வலம் வருவார். இதே போல் இரவு சிம்ம, சேஷ, கருட, ஹனுமன், யானை வாகனங்களில் அருள்பாலிக்க உள்ளார்.


மே 26 காலை 10:30 மணி முதல் மதியம் 12:00 மணிக்குள் ஸ்ரீதேவி, ஸ்ரீதேவி தாயாருடன் பெருமாள் திருக்கல்யாணம் நடக்கிறது. இரவு பூ பல்லக்கில் பட்டினப்பிரவேசம் நடக்கும். மறுநாள் நவநீத கிருஷ்ணன் சேவை, குதிரை வாகனத்தில் திருமங்கை ஆழ்வார் வேடப்பாரி லீலை நடக்க உள்ளது. மே 28 மாலை 4:00 மணிக்கு ரத வீதிகளில் தேரோட்டம் நடக்கிறது. மே 29 காலை தீர்த்தவாரி, இரவு கொடி இறக்கப்பட்டு விழா நிறைவடையும். ஏற்பாடுகளை எமனேஸ்வரம் சவுராஷ்டிரா சபை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !