செல்லமுத்து மாரியம்மன் கோவிலில் வரும் 26ம் தேதி செடல் உற்சவம்
புதுச்சேரி: குருவப்பநாயக்கன்பாளையம் செல்லமுத்து மாரியம்மன் கோவில் செடல் உற்சவம் வரும் 26ம் தேதி நடக்கிறது.
குருவப்பநாயக்கன்பாளையம் செல்லமுத்து மாரியம்மன், ஐயனார், பிடாரியம்மன் கோவில் 19ம் ஆண்டு செடல் பிரமோற்சவம், கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனையும், மாலையில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதி உலா நடந்தது. 3ம் நாள் உற்சவமான நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதணை நடந்தது. இரவு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடந்தது. வரும் 24ம் தேதி பிடாரி அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபடுதல், சிங்க வாகனத்தில் அம்மன் வீதி உலா நடக்கிறது. 25ம் தேதி அய்யனாரப்பனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு, குதிரை விடுதல் நடக்கிறது. வரும் 26ம் தேதி காலை 10:00 மணிக்கு செடல் உற்சவமும், பகல் 12:00 மணிக்கு பால் சாகை வார்த்தல் நடக்கிறது.