உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்போரூர் கந்தசுவாமி கோவில் நடைபாதையில் வெப்பத்தை சமாளிக்க வெள்ளை பெயின்ட்

திருப்போரூர் கந்தசுவாமி கோவில் நடைபாதையில் வெப்பத்தை சமாளிக்க வெள்ளை பெயின்ட்

திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவில் வளாகத்தில் வெப்பத்தை சமாளிக்க நடைபாதையில் வெள்ளை பெயின்ட் அடிக்கப்பட்டுள்ளது. திருப்போரூரில் பிரசித்தி பெற்ற கந்தசுவாமி கோவில் உள்ளது. இங்கு பல்வேறு பகுதிகளிலிருந்து தினமும் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து சுவாமிய தரிசிக்கின்றனர். பக்தர்களின் வசதிக்காக கோவில் வளாக பகுதிகளில் நிழற்கூரைகள், உள் பகுதியில் மின் விசிறி வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது கோடைகாலம் என்பதால், வழக்கத்தை விட பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சில இடங்களில் பக்தர்கள் நடந்து செல்லும்போது வெயில்தாக்கம் அதிகரித்து அவதிப்பட்டனர். எனவே, பக்தர்கள் தரையில் வெள்ளைபெயின்ட் அடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதையடுத்து கோவில் நிர்வாகத்தினர், பக்தர்களின் நலன் கருதி நடைபாதையில் வெப்பம் தெரியாத வகையில் வெள்ளை பெயின்ட் அடிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !