உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுச்சேரி வரதராஜ பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

புதுச்சேரி வரதராஜ பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

புதுச்சேரி; காந்தி வீதி பெருந்தேதி தாயார் சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.


புதுச்சேரி காந்தி வீதியில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றுத்துடன் சிறப்பாக துவங்கியது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி கோயிலை சுற்றி வலம் வந்து அருள் பாலித்தார். விழாவில் முன்னதாக காலை சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. தினமும் குதிரை வாகனம், தங்க சிம்ம வாகனம், யாளி, ஹனுமந்த வாகனம் என பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா புறப்பாடு நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !