உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் முன் தேங்கும் கழிவு நீர்

லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் முன் தேங்கும் கழிவு நீர்

சின்னமனூர்: சின்னமனூர் பழமையும் பிரசித்தி பெற்ற லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் உள்ளது. பெருமாள் நின்ற கோலத்தில் அவரது காலடியில் ஆஞ்சநேயர் இருப்பது தனிச் சிறப்பாகும். தினமும் காலை மாலையில் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் இங்கு வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.இந்த கோயிலிற்கு முன்புறம், நடுவீதியில் சாக்கடை கழிவு நீர் தேங்கியுள்ளது. இக்கழிவு நீர் அருகில் உள்ள தனியார் கட்டடத்தில் இருந்து வெளியேறுகிறது. இதனால் கோயிலிற்கு வரும் பக்தர்கள் மூக்கை பொத்திக் கொண்டு செல்கின்றனர். வயல்களுக்கு செல்லும் விவசாயிகள் தெருவில் டூவீலரில் செல்ல முடியாமல் பக்கவாட்டில் செல்கின்றனர். அருகில் உள்ள கடைக்காரர்களும், குடியிருப்போர் கழிவுநீர் அகற்ற கோரி புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !