சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில் வைகாசி மாத பூச விழா
ADDED :1 days ago
சங்கராபுரம்: சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில் வைகாசி மாத பூச விழா நடந்தது.
மன்ற பொருளாளர் முத்துக்கருப்பன் தலைமை தாங்கினார். செயலாளர் ராதாகிருஷ்ணன், சவுந்தராஜன், பழனியாபிள்ளை முன்னிலை வகித்தனர். மோட்டார் வாகன சங்க செயலாளர் விஜயகுமார் வரவேற்றார். ரோட்டரி முன்னாள் தலைவர் மூர்த்தி, தலைமை ஆசிரியர் வெங்கடேசன் குழுவினரால் அகவல் படித்து உலக அமைதிக்காக பிரார்த்தனை நடந்தது.
மோட்டார் வாகன சங்க தலைவர் திருவேங்கடம், தமிழ் படைப்பாளர் சங்க செயலாளர் சக்திவேல், கார்குழலி அறக்கட்டளை தலைவர் தாமோதரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சிறப்பு ஜோதி தரிசனத்தை தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.