பொட்டல்புளி கிராமத்தில் கோயில் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம்
ADDED :1 hours ago
கமுதி: கமுதி அருகே பொட்டல்புளி கிராமத்தில் விநாயகர், அய்யனார், கருப்பணசாமி, சேமன் குதிரை உட்பட பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.
இதனை முன்னிட்டு மங்கள இசை,விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், மகாலட்சுமி பூஜை, முதல்கால யாகபூஜை, பூர்ணாஹீதி தீபாராதனை நடந்தது.
நேற்று இரண்டாம் கால யாக பூஜை, நாடி சந்தனம், மஹா பூர்ணாஹீதி தீபாராதனை நடந்தது.
காலை 9.30 மணிக்கு மேல் சிவாச்சாரியார்கள் முன்னிலையில் கும்ப நீர் ஊற்றப்பட்டது.
பின் விநாயகர், அய்யனார், கருப்பணசாமி உட்பட பரிவார தெய்வங்களுக்கு பால், சந்தனம், மஞ்சள், திரவிய பொடி உட்பட பொருட்களால் அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில் கமுதி அதனை சுற்றியுள்ள பகுதியில் இருந்து பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பொட்டல்புளி கிராம மக்கள் செய்தனர்.