உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி விழா

திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி விழா

திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி விழா நடந்தது.

திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு நேற்று காலை மூல மூர்த்திகளுக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு ஹோமம், தட்சணாமூர்த்தி மற்றும் நவகிரக குரு பகவானுக்கு அபிஷேகம், வெள்ளிக் கவசத்தில் அலங்காரம் செய்யப்பட்டு 11.08 மணிக்கு மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி அடையும் நேரத்தில் சோடசோபவுபச்சார தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு நவகிரக குரு பகவானுக்கு விபூதி அலங்காரத்தில் அர்ச்சனை, தீப ஆராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்து சமய அறநிலையத்துறை பக்தர்களுக்கான விரிவான ஏற்பாடுகளை செய்திருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !