உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நத்தம் கைலாசநாதர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா

நத்தம் கைலாசநாதர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா

நத்தம்; நத்தம்-கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் நேற்று குருப்பெயர்ச்சி விழா நடந்தது.இதையொட்டி குருபகவான் தட்சிணாமூர்த்திக்கு விசேஷ பூஜைகளும், சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு யாகசால பூஜைகளும் நடந்தது.பின்னர் கைலாசநாதர்-செண்பகவல்லி அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தது.தொடர்ந்து கோவில் உள்பிரகார வளாகத்தில் உற்சவர் குருபகவானுக்கு சிறப்பு அலங்காரமும், அபிஷேகங்களும், ஹோம பூஜைகளும் நடந்தது. இதில் சுற்றுவட்டாரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு உற்சவரையும், மூலவரையும் விளக்கேற்றி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் தங்களது பெயர், ராசிகளுக்கு பரிகாரம் செய்து ஹோமத்தில் எள்ளு பொட்டலங்களை போட்டு வணங்கினர். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினரும், கோவில் குருக்களும் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !