உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அலகு மலையில் வைகாசி விசாகத் திருவிழா;

அலகு மலையில் வைகாசி விசாகத் திருவிழா;

பொங்கலூர்;  பொங்கலூர் அலகுமலை முத்துக்குமார பால தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா மற்றும், 1,108 கலசாபிஷேக விழா வரும் வெள்ளிக்கிழமை துவங்குகிறது.

அன்று இரவு மாலை,5:15 மணிக்கு மஞ்சள் பிள்ளையார் வழிபாடு, பூர்வாங்க பூஜை, கலச ஸ்தாபனம், 1,108 புதிய கலசங்களிலும், 1,108 முருகப்பெருமானை எழுந்தருளச் செய்தல், பல்வேறு ரகசிய மந்திரங்களினால் ஜபம் செய்தல், விசேஷ உபசார பூஜைகள், மஹா தீபாராதனை நடக்கிறது. சனிக்கிழமை காலை, 7:15 மணிக்கு, 1,108 கலச பூஜை, யாகம், மஹா திரவ்யாஹுதி, வஸ்த்திர ஆஹுதி, மங்கள மஹா பூர்ணாஹுதி, மகா தீபாதாரனை நடக்கிறது. பின் அருள் சக்தியூட்டப்பட்ட,1,108 புதிய கலசங்கள் மூலவர் முத்துக்குமார பால

தண்டாயுதபாணி சுவாமி ஆலயம் வலம் வந்து கலசாபிஷேகம் நடக்கிறது. கலசாபிஷேகம் முடிந்தபின் அபிஷேக தீர்த்தம், தாம்பூலம் சகிதமாக பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. பகல், 1: 25 மணிக்கு மஹா அலங்காரம், சண்முகார்ச்சனை, தங்க தேரோட்டம், மகா தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து அடிவார மண்டபத்தில் அன்னதானம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !