உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூமாரி அம்மன் கோயில் திருவிழா

பூமாரி அம்மன் கோயில் திருவிழா

சத்திரப்பட்டி: சத்திரப்பட்டி அருகே சங்கரபாண்டியபுரம் பூமாரி அம்மன் கோயில் பூக்குழி திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.

சங்கரபாண்டியபுரம் பூ மாரியம்மன் கோயில் வைகாசி பொங்கல் பூக்குழி 10 நாள் திருவிழா மே 15-ல் துவங்கியது. தினமும் பெண்கள் பங்கேற்ற கும்மி பாட்டு, அம்மன் வழிபாடு நடந்தது. ஞாயிற்றுக்கிழமை ஊர் கிராம தேவதை அம்மச்சியார் அம்மன் கோயிலில் பொங்கல் வைத்தல், வில்லிசை, அம்மன் கரகம், திங்கள் இரவு 9:00 மணிக்கு முளைப்பாரி ஊர்வலம் முன் செல்ல தொடர்ந்து அக்னி சட்டி ஏந்திய பக்தர்கள் சுற்றி வந்தனர்.

நேற்று காலை 5:30-க்கு காப்பு கட்டிய பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்கள் நேர்த்தி கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !