உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவில்லிபுத்துார் வைத்தியநாதசுவாமி கோயிலில் திருக்கல்யாண திருவிழா

ஸ்ரீவில்லிபுத்துார் வைத்தியநாதசுவாமி கோயிலில் திருக்கல்யாண திருவிழா

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயிலில் திருக்கல்யாண திருவிழா நேற்று இரவு நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

மே 21ல் திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலையில் பல்லக்கு சேவை, இரவு வீதியுலா நடந்தது.

திருக்கல்யாண வைபவம் நேற்று இரவு 7:00 மணிக்கு மேல் துவங்கியது. வைத்தியநாத சுவாமி, சிவகாமி அம்பாளுக்கு பூஜைகள் செய்து திருக்கல்யாண வைபவத்தை கோயில் பட்டர்கள் செய்தனர். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் அலுவலர்கள், பட்டர்கள் செய்திருந்தனர்.

நாளை (மே 29) காலை 8:00 மணிக்கு தேரோட்டம், மே 30 காலை வைகாசி விசாக சிறப்பு பூஜைகள் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !