உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடுகபட்டி கிராமத்தில் கோயில் வருடாபிஷேக விழா

வடுகபட்டி கிராமத்தில் கோயில் வருடாபிஷேக விழா

கமுதி: கமுதி அருகே வடுகபட்டி கிராமத்தில் செல்வவிநாயகர், சுந்தர்ராஜ பெருமாள், குங்கும காளியம்மன், நாக கன்னியம்மன், கருப்பணசாமி கோயில் வருடாபிஷேக விழா, முத்துராமலிங்கத்தேவர் 13ம் ஆண்டு குருபூஜை விழா நடந்தது.

இதனை முன்னிட்டு ஒரு மாதத்திற்கு முன்பு பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர்.

விநாயகர் கோயிலில் இருந்து கிராமத்தின் முக்கிய வீதிகளில் பால்குடம், அக்னிசட்டி, வேல் குத்தி ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். குங்கும காளியம்மனுக்கு பாலபிஷேகம் நடந்தது. கோயில் முன்பு பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

முளைப்பாரி ஊர்வலமாக வந்து கோயிலில் வைத்தனர்.

விழாவில் கமுதி அதனை சுற்றியுள்ள பகுதியிலிருந்து கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !