குன்றத்துார் சோமநாதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
ADDED :8 days ago
குன்றத்துார்; சோமங்கலம் சோமநாதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் இன்று விமரிசையாக நடந்தது.
குன்றத்துார் சோமங்கலம் கிராமத்தில், பழமையான காமாட்சி அம்மன் உடனுறை சோமநாதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. நவகிரகங்களில் இக்கோவில் சந்திர தலமாக விளங்குகிறது. ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில், ஆகம விதிப்படி சமீபத்தில் புனரமைக்கப்பட்டது. இதையடுத்து, கோவில் கும்பாபிஷேக விழா, 24ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, நான்கு கால யாக பூஜைகள் செய்யப்பட்டு, இன்று காலை 8:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. கோவில் விமான கலசத்தில் சிவாச்சாரியார்கள் முன்னிலையில், புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிப்பட்டனர்.