உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேத்தாம்பட்டியில் புரவி எடுப்பு திருவிழா

தேத்தாம்பட்டியில் புரவி எடுப்பு திருவிழா

நத்தம்; நத்தம் அருகே தேத்தாம்பட்டியில் அய்யனார், சின்னக்கருப்பு, ஆண்டிச்சாமி, கன்னிமார் சுவாமி கோவில்களின் புரவி எடுப்பு திருவிழா நடந்தது. இதையொட்டி வத்திபட்டியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சுவாமிகள் மற்றும் கன்னிமார், குதிரை, மதிலை சிலைகள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு ஊர் மந்தையில் கண் திறக்கப்பட்டது. பின்னர் கோவிலுக்குள் சென்ற சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது.பின்னர் இன்று மாலையில் வாணவேடிக்கைகள், வர்ணக் குடைகளுடன் அய்யனார் சுவாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் பக்தர்கள் புடைசூழ ஊர்வலமாக இருப்பிடம் போய் சேர்கிறது.இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தேத்தாம்பட்டி ஊர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.




தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !