உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வர்ணமுத்து மாரியம்மன் கோவிலில் மிளகாய் பொடி அபிஷேகம்

வர்ணமுத்து மாரியம்மன் கோவிலில் மிளகாய் பொடி அபிஷேகம்

வானுார்: இடையஞ்சாவடி வர்ணமுத்து மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, மிளகாய் பொடி அபிஷேகம் நடந்தது.

இக்கோவிலில், கடந்த 1935ம் ஆண்டு முதல் வர்ணமுத்து மாரியம்மனுக்கு சாகை வார்த்தல், செடல் உற்சவமும், அங்காளம்மனுக்கு மிளகாய் பொடி அபிஷேகமும் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, 91வது ஆண்டாக இக்கோவிலில் தீமிதி திருவிழா கடந்த மாதம் 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் இரவு சுவாமி வீதியுலா நடந்து வந்தது.

நேற்று மாலை 4:00 மணிக்கு விரதமிருந்த பக்தர்கள் 3 பேருக்கு மிளகாய் அபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து அம்மனுக்கு செடல் உற்சவமும், இரவு 7:00 மணிக்கு தீமிதி திருவிழாவும் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் அலகு குத்தியும், தீ மிதித்தும் நேர்த்திக் கடன் செலுத்தினர்.

ஏற்பாடுகளை ஊர் பொது மக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !