உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீகாமாட்சியம்மன் கோவில் பாலாலயம் கும்பாபிஷேக விழா ஏற்பாடுகள் ‘ஜரூர்’

ஸ்ரீகாமாட்சியம்மன் கோவில் பாலாலயம் கும்பாபிஷேக விழா ஏற்பாடுகள் ‘ஜரூர்’

திருப்பூர்: திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் பின்புறம் அமைந்துள்ள ஸ்ரீகாமாட்சியம்மன் கோவில், நுாற்றாண்டு பழமை வாய்ந்தது.

கோவிலுக்கு பல்வேறு காலகட்டங்களில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. அதன்தொடர்ச்சியாக, 5வது கும்பாபிஷேக விழா நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

கும்பாபிஷேக விழா குறித்த ஆலோசனை கூட்டம், நேற்று முன்தினம் திருமண மண்டபத்தில் நடந்தது. கோவில் தலைவர் சுப்பிரமணியம் தலைமை வகித்தார். அறங்காவலர்கள், காமாட்சியம்மன் திருமண மண்டப அறங்காவலர்கள் பங்கேற்றனர்.

கோவிலில், பாலாலய பூஜை நடந்துள்ள நிலையில், திருப்பரங்குன்றம் ராஜா பட்டர் வாயிலாக, கும்பாபிஷேக விழா தேதி குறிக்கப்பட உள்ளது. தற்போது, திருப்பணி குழு கவுரவ தலைவராக மூத்த உறுப்பினர் சுதந்திரம், திருப்பணி குழு தலைவராக செல்வம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பணி குழுவில், பெண்கள் பிரிவு குழு, சென்னை சில்க்ஸ் பத்மா சிவலிங்கம் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலை பொலிவு படுத்தும் வகையில் திருப்பணிகளை செய்து, கும்பாபிஷேக விழாவை விமரிசையாக நடத்தலாம் என தீர்மானிக்கப்பட்டது.

குழுக்கள் வாரியாக, கும்பாபிஷேக ஏற்பாடுகள் துவங்கப்படும்; திருப்பூரின் வரலாறுடன் இணைந்த காமாட்சியம்மன் கோவில் வரலாறு மற்றும் பக்தர்களின் அனுபவங்கள் அடங்கிய,கும்பாபிஷேக விழா மலர் வெளியிடவும் முடிவு செய்துள்ளதாக, கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !