வத்தலக்குண்டு தங்கமலை முருகன் கோவிலில் வருஷாபிஷேகம்
ADDED :129 days ago
வத்தலக்குண்டு, வத்தலக்குண்டு தங்கமலை முருகன் கோயில் வருஷாபிஷேகம் நடந்தது. முருகன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். கணபதி ஹோமம், யாக வேள்விகள் நடந்தன. பஞ்சாமிர்தம் விபூதி சந்தனம் இளநீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடந்தன. அன்னதானம் நடந்தது. கோயில் நிர்வாகி தீபன் சக்கரவர்த்தி ஏற்பாடுகளை செய்திருந்தார்.