உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 4ம் தேதி துவங்கி விமரிசை

4ம் தேதி துவங்கி விமரிசை

சிங்காநல்லுார் அக்ரஹாரத்தில் உள்ள உலகளந்த பெருமாள் கோவிலில், கடந்த சில மாதங்களாக புனரைமைப்பு பணிகள் நடந்து வந்தன. பணிகள் முடிந்த நிலையில், இன்று மகா கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது.

இதற்கான விழா, கடந்த 4ம் தேதி காலை 8:00 மணிக்கு மகா சுதர்சன ஹோமத்துடன் துவங்கியது. அன்று காலை 11:30 மணிக்கு சாற்றுமறை, தீர்த்தம், சடாரி பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை 6:00 மணிக்கு அங்குரார்பணம், சோம ஹோமம், வேத, திவ்யப்ரபந்தம், வாஸ்து ஹோமம் நடந்தது.

5ம் தேதி காலை 8:00 மணிக்கு, உத்சவர் மற்றும் ஆச்சார்யார்கள் ரக்ஷா பந்தனம், தீர்த்த சங்க்ரஷனம், கலாகர்ஷணம் நடந்தன. காலை 10:00 மணிக்கு, யாகசாலை பிரவேசம், முதலாம் கால யாக சாலையும், மதியம் 12:00 மணிக்கு வேத திவ்யப்ரபந்த சாற்றுமறையும், மாலை 4:00 மணிக்கு, ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜபெருமாளுக்கு சகல உபசாரங்களுடன் 81 கலச திருமஞ்சனம் நடந்தன. மாலை 6:00 மணிக்கு இரண்டாம் கால யாக சாலை துவங்கியது.

நேற்று காலை 9:00 மணிக்கு மூன்றாம் கால யாகசாலையும், மதியம் 12:00 மணிக்கு திவ்யப்ரபந்த சாற்றுமறையும், மாலை 4:00 மணிக்கு பெருமாள், தாயார் கோபுரங்கள், ராஜகோபுரம், பரமபதவாசல் திருமஞ்சனம் ஆகியவை நடந்தன.

மாலை 6:00 மணிக்கு நான்காம் கால யாக சாலையும், இரவு 8:00 மணிக்கு விசேஷ சயனாதி வாசம், சாற்றுமறையும் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !