திருக்கண்டேஸ்வரம் காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது.
நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் நடனபாதேஸ்வரர் கோவிலில், ஆனந்த காலபைரவருக்கு தனி சன்னதி உள்ளது. தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு 108 சங்குகளில் புனித நீர் நிரப்பி யாகம் செய்து காலபைரவருக்கு சங்காபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர் அருள்பாலித்தார். கைலாசநாதர், பூலோகநாதர் கோவில்களிலும் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜைகள் நடந்தது.
விருத்தாசலம் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் சன்னதியில் உள்ள கால பைரவர் சுவாமிக்கு, தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், எலுமிச்சை, செவ்வரளி மாலை அணிவித்து தீபாராதனை நடந்தது. பக்தர்கள் தேங்காய், பூசணி, எலுமிச்சை விளக்குகள் ஏற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதேபோல், கருவேப்பிலங்குறிச்சி சாலையில் உள்ள வேடப்பர் சுவாமி, சந்தைதோப்பு அங்காள பரமேஸ்வரி அம்மன், தென்கோட்டை வீதி மோகாம்பரி அம்மன், எருமனுார் ரோடு ஜெகமுத்து மாரியம்மன் கோவில்களில் அஷ்டமி சிறப்பு வழிபாடு நடந்தது. நடுவீரப்பட்டு நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரர் கோவிலில் நேற்று தேய்பிறை அஷ்டமி பூஜையொட்டி, நேற்று மாலை கால பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், மகா தீபாராதனை நடந்தது.