/
கோயில்கள் செய்திகள் / பாண்டித்துரை முனீஸ்வரர் கோயில் வைகாசி திருவிழா; பால்குடம், காவடி எடுத்து நேர்த்திகடன்
பாண்டித்துரை முனீஸ்வரர் கோயில் வைகாசி திருவிழா; பால்குடம், காவடி எடுத்து நேர்த்திகடன்
ADDED :7 hours ago
காரைக்குடி: காரைக்குடி வைரவபுரம் பாண்டித்துரை முனீஸ்வரர் கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
காரைக்குடி வைரவபுரத்தில் உள்ள பாண்டித்துரை முனீஸ்வரர் கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு மே 29ஆம் தேதி பூச்சொரிகள் விழா நடந்தது. கடந்த ஜூன் 2ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. ஜூன் 9 ல் முளைப்பாரி நிகழ்ச்சி நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான பால்குடத் திருவிழா இன்று நடந்தது. வாட்டர் டேங்க் அய்யனார் கோயிலில் இருந்து பக்தர்கள் பால்குடம், காவடிகள் எடுத்து கல்லூரி சாலை வழியாக கோயிலை வந்தடைந்தனர். ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று இரவு சாமி வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.