அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் வரும் 13ல் தங்க தேரோட்டம்
அன்னூர்: அன்னூரில் வரும், 13ம் தேதி தங்க தேரோட்டம் நடைபெறுகிறது.
அன்னூர், மன்னீஸ்வரர் கோவிலில், 2 கோடி ரூபாய் செலவில் புதிதாக தங்கத்தேர் உருவாக்கப்பட்டது. கடந்த பிப்., 1ம் தேதி முதல் முறையாக தேரோட்டம் நடந்தது. அதன் பிறகு ஒவ்வொரு மாதமும், கிருத்திகையன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது. இந்த மாத கிருத்திகையை முன்னிட்டு வரும் 13ம் தேதி மாலை 6:30 மணிக்கு, அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் தங்க தேரோட்டம் நடைபெறுகிறது. இதையடுத்து கல்யாண சுப்பிரமணியசாமிக்கு, அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடைபெறுகிறது. அன்னதானம் வழங்கப்படுகிறது. சித்தர்கள் வழிபட்ட சாலையூர் பழனி ஆண்டவர் கோவிலில் வருகிற 13ம் தேதி மாலை கிருத்திகையை முன்னிட்டு, மாலை 6:00 மணிக்கு, அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடைபெறுகிறது. இரவு 7:00 மணிக்கு உற்சவர் திருவீதி உலா நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.