உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோயில் பொங்கல் விழா; மாவிளக்கு ஏற்றி வழிபாடு

அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோயில் பொங்கல் விழா; மாவிளக்கு ஏற்றி வழிபாடு

அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை நெசவாளர் காலனி முத்து மாரியம்மன் கோயிலில் பொங்கல் விழா நடந்தது.

காப்பு கட்டுடன் விழா துவங்கியது. தினமும் ஒவ்வொரு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் காட்சியளித்தார். பெண்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். கும்பம் வளர்த்தல், பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம், மலர் அலங்காரம், பூஜைகள் நடந்தது. பெண்கள், குழந்தைகள் மாவிளக்கு ஏற்றி ஊர்வலமாக வந்து அம்மனுக்கு செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !