ராமேஸ்வரத்தில் லட்சுமணேசுவரர் கோயில் கும்பாபிஷேகம்!
ADDED :4680 days ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உபகோயிலான லட்சுமணேசுவரர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. அடுத்தாண்டு ராமநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி, உபகோயிலான லட்சுமணேசுவரர் கோயிலில் பல லட்ச ரூபாய் செலவில் திருப்பணிகள் நடந்தது. நேற்று முன்தினம் கோயில் வளாகத்தில் 51 கும்பங்களுடன் கும்பாபிஷேகத்திற்கான சிறப்பு பூஜைகள் துவங்கின. நேற்று கோபூஜை, இரண்டாம் கால யாக பூஜை முடிந்து, வேதவிற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க காலை 9.40 மணிக்கு கோயில் கோபுர கலசத்தில் குருக்கள் உதயகுமார் தலைமையில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர், லட்சுமணேசுவரர் சன்னதியில் மகா தீபாரதனை நடந்தது. பக்தர்கள் ஏராளமானோர் தரிசனம் செய்தனர். கோயில் இணை ஆணைர் செல்வராஜ், மேலாளர் (பொறுப்பு) சுக்காரின் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.