உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஈசுப்புளி வலசை உமய சக்தி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா

ஈசுப்புளி வலசை உமய சக்தி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா

திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே குதக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட ஈசுப்புளி வலசையில் கும்பாபிஷேக விழா நடந்தது.

ஈசுப்புளி வலசையில் 130 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலில் திருப்பணிகள் மூலம் புனரமைப்பு செய்யப்பட்டது. நேற்று அனுக்கை, விக்னேஸ்வர பூஜை, பூர்ணாகுதி, எந்திரஸ்தாபனம் உள்ளிட்டவைகள் நடந்தது. இன்று காலை 11:00 மணிக்கு உமய சக்தி அம்மன், சித்தி விநாயகர் கோயில் கோபுர விமான கலசத்தில் உத்தரகோசமங்கை பாலசுப்ரமணிய சிவாச்சாரியார், நாகநாதர் குருக்கள் தலைமையில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். பின்னர் மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பகலில் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை ஈசுப்புளி வலசையில் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !