காளஹஸ்தி கங்கையம்மன் கோவிலில் வருடாந்திர திருவிழா கோலாகலம்
ஸ்ரீ காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் துணை கோயிலான பானகலில் உள்ள கங்கையம்மன் மூலஸ்தானத்தில் இன்று வியாழக்கிழமை வருடாந்திர திருவிழா கோலாகலமாக நடைபெற்றன. இந்த புனித யாத்திரை தலத்தில் ஆன்மீகம் முக்கியத்துவம் வாய்ந்தவையாக ஸ்ரீ காளஹஸ்தி அடுத்துள்ள பானகல் கங்கை அம்மன் திருவிழாவில், நகரின் சுற்றிவுள்ள அனைத்து கிராமங்களிலிருந்தும் இடங்களிலிருந்தும் வந்து ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசித்து தங்கள் நேர்த்திக் கடன்களைச் செலுத்தினர். திருவிழாக் கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்வதில், குழு அமைப்பாளர்களும் அவர்களது ஊழியர்களும் திட்டமிட்டபடி பணியாற்றினர். புதன்கிழமை இரவு, முதல் இன்று அதிகாலை வரை ஊர்வலம் இரவு முழுவதும் பானகலில் இருந்து பொன்னாலம்மன் கோயில் மற்றும் ரயில் நிலையம் வரை ஊர்வலம் தொடர்ந்து நடைபெற்றது . பானகல் கங்கை அம்மனுக்கு ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் சார்பில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கொட்டே சாய் பிரசாத் மற்றும் கோயில் அதிகாரிகள் (சாரே ) சீர்வரிசை பொருட்கள் மற்றும் பூஜை பொருட்களை வழங்க பட்டது.