கட்டுமான கழிவுகளிடையே சோழர் காலத்து சிற்பங்கள்
சென்னை: கட்டுமான கழிவுகளிடையே சோழர் காலசிற்பங்களை வீசியுள்ளதாக, த.வெ.க., அரசுக்கு அ.தி.மு.க., கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் சீரமைப்பு பணிகள் நடந்து வரும் நிலையில், வரலாற்றுச் சிறப்புமிக்க சோழர் கால சிற்பங்கள்,இந்த பொய்க்கால் குதிரை அரசால் மிக மோசமாககையாளப்பட்டு, சேதம் அடைந்துள்ளன. தமிழகத்தின் வரலாற்றுப் பெருமை எதுவுமே தெரியாமல், வெற்றுக் கவர்ச்சியில் ஆட்சியில் அமர்ந்திருக்கும் முதிர்ச்சியற்ற அரசு, தமிழரின் ஒப்பில்லா வரலாற்றின் அடையாளங்களை, கட்டுமான கழிவுகளுக்கு இடையே, ஏதோ குப்பையை போடுவது போல வைத்திருப்பதுகடும் கண்டனத்திற்குரியது. தமிழரின் வரலாற்றை உலகறியச் செய்ய கீழடி அகழாய்வை மூன்று கட்டங்களாக நடத்தி, அருங்காட்சியகம் அமைத்த பெருமைக்குரியது அ.தி.மு.க., அரசு. ‘தமிழகத்தின் கோட்டைகள், வரலாற்று சின்னங்கள் மீட்டெடுக்கப்பட்டு பாதுகாக்கப்படும்’ என, தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள, த.வெ.க., அரசு நம்மிடமிருக்கும் வரலாற்றுச் சின்னங்களை முதலில் நாசப்படுத் தாமல் பாதுகாக்க வேண்டும். எனவே, இந்த விவகாரத்தில் மத்திய தொல்லியல் ஆய்வுத் துறை தலையிட்டு, வரலாற்றுப்பொக்கிஷங்களை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.