தமிழக அறநிலையத்துறை கமிஷனர் கோவை கோயில்களில் ஆய்வு
ADDED :1 hours ago
கோவை: தமிழக அறநிலையத்துறை கமிஷனராக பொறுப்பேற்ற வினய், கோவைக்கு நேற்று வந்தார். அவரை இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை கமிஷனர் ரமேஷ், மருதமலை சுப்ரமணியசுவாமி கோயில் துணை கமிஷனர் விமலா ஆகியோர் வரவேற்றனர். பெரியகடை வீதியிலுள்ள கோனியம்மன், மருதமலை சுப்ரமணியசுவாமி கோயில், பேரூர் பட்டீஸ்வரர் கோயில்களில் ஆய்வு நடத்தினார். சரவணம்பட்டி சிரவையாதினம் கவுமார மடாலயம் குமரகுருபர சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார். சில நிமிடங்கள் கலந்துரையாடினார். அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.