கொடைரோடு காளியம்மன், பகவதியம்மன் கோயில் வைகாசி திருவிழா
ADDED :118 days ago
கொடைரோடு; கொடைரோடு இந்திராநகரில் காளியம்மன், பகவதியம்மன் கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு அம்மன் பூங்கரகத்தில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று முன்தினம் மேளதாளம், வானவேடிக்கையுடன் அம்மன் பூங்கரகம் அழைப்பு நடந்தது. அதனைத் தொடர்ந்து கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பக்தர்கள் முளைப்பாரி, மாவிளக்கு, தீச்சட்டி, பால்குடம் எடுத்தும், பொங்கல் வைத்தும்,கிடா வெட்டியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று அம்மன் ஊர்வலத்தில் வழிநெடுகிலும் அபிஷேகம் செய்து வழிபட்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தர்கள், விழா குழுவினர் செய்திருந்தனர்.