வல்லக்கோட்டை முருகன் கோவிலில் வைகாசி கிருத்திகை விழா விமரிசை
ADDED :3 hours ago
காஞ்சிபுரம்; வைகாசி மாத 2வது கிருத்திகை விழா இன்று வல்லக்கோட்டை முருகன் கோவிலில் விமரிசையாக நடந்தது. ஒரகடம் அடுத்த, வல்லக்கோட்டையில் அருணகிரிநாதரால் பாடல் பெற்ற வள்ளி – தெய்வானை சமேத முருகன் கோவில் உள்ளது. இங்கு, வைகாசி மாத இரண்டாவது கிருத்திகை விழா தினத்தை முன்னிட்டு, அதிகாலை 5:00 மணிக்கு முருகப் பெருமானுக்கு 16 வித திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தன. மூலவர் முருகன் சந்தன காப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். உத்சவர், வள்ளி – தெய்வானை சமேத முருகன் பலவித நிற சாமந்தி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.