நெல்லிக்குப்பம் வீரபத்திர சுவாமி கோவிலில் கிருத்திகை வழிபாடு
ADDED :121 days ago
நெல்லிக்குப்பம்: வீரபத்திர சுவாமி கோவிலில் கிருத்திகையை முன்னிட்டு சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. நெல்லிக்குப்பம், கீழ்பட்டாம்பாக்கம் வீரபத்திர சுப்ரமணிய சுவாமி கோவிலில், கிருத்திகையை முன்னிட்டு சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு யாகம் நடத்தி 108 சங்காபிஷேகம் நடந்தது. மூலவர் வள்ளி தேவசேனா சமேதராய், சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். உற்சவர் வள்ளி தேவசேனா சமேதராய் சிறப்பு அலங்காரத்தில் கோவிலை வலம் வந்து அருள்பாலித்தார். அய்யப்பன் கோவில், பூலோகநாதர், வரசித்தி விநாயகர் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன.