முதுகுளத்துார் ஐயப்பன் கோயிலில் ஆனி மாத சிறப்பு பூஜை
ADDED :15 hours ago
முதுகுளத்துார்: முதுகுளத்துார் மின்வாரிய அலுவலகம் எதிரே உள்ள ஐயப்பன் கோயிலில் முதுவை சாஸ்தா டிரஸ்ட் சார்பில் ஆனி மாத சிறப்பு பூஜை நடந்தது. குருநாதர் திருமால் தலைமை வகித்தார். துணைக்குருநாதர் புயல்நாதன், தலைவர் கண்ணதாசன் முன்னிலை வகித்தனர். கணபதி ஹோமம் பூர்ணாஹீதி, யாகசால பூஜைகள் நடந்தது. படிபூஜை, பஜனை வழிபாடு நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
முதுகுளத்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் உள்ள ஐயப்பன் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. குருநாதர் ராஜன் தலைமை வகித்தார். அன்னதானம் நடந்தது. முதுகுளத்துார், கமுதி பகுதியில் உள்ள ஐயப்பன் கோயிலில் ஆனி மாத சிறப்பு பூஜை நடந்தது.