உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமை; பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமை; பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

அவிநாசி: புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமையை முன்னிட்டு தாளக்கரை லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதேபோல், அவிநாசி மடத்து பாளையம் வினோபாபேதி ஸ்ரீ பூமி நீளா சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் சுவாமி, விழுப்புரம் அடுத்த கோலியனூர்ஸ்ரீ பூமி, நீளா சமேத வரதராஜ பெருமாள் கோவில்,  கோவை பொள்ளாச்சி மெயின் ரோடு ஈச்சனாரி அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவை கொடிசியா அருகில் உள்ள திருப்பதி ஶ்ரீ வெங்கடாசலபதி கோவிலில்,  வைரமுடி சேவையில் ஏழுமலையான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !