/
கோயில்கள் செய்திகள் / ஆனி திருவாதிரை திருமஞ்சனம்; வெள்ளி கவசத்தில் செவிலிமேடு ராமானுஜர் அருள்பாலிப்பு
ஆனி திருவாதிரை திருமஞ்சனம்; வெள்ளி கவசத்தில் செவிலிமேடு ராமானுஜர் அருள்பாலிப்பு
ADDED :28 minutes ago
காஞ்சிபுரம்: ஆனி மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காஞ்சிபுரம் செவிலிமேடில் சாலை கிணறு ராமானுஜர் கோவில் உள்ளது. ஆனி மாத திருவாதிரை திருநட்சத்திரத்தையொட்டி, இன்று காலை 10:00 மணிக்கு ராமானுஜருக்கு சிறப்பு திருமஞ்சனமும், மஹாதீப ஆராதனையும் நடந்தது. தொடர்ந்து வெள்ளி கவச அலங்காரத்தில் ராமானுஜர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதமும், அன்னபிரசாதமும் வழங்கப்பட்டது.