வடலூரில் பக்தர்கள் கழிவறை சீரமைக்க கோரிக்கை
ADDED :115 days ago
வடலூர்; பக்தர்கள் கழிவறையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
வடலூரில் உள்ள சத்திய ஞான சபையில் வழிபட்டு, அங்குள்ள தருமச்சாலையில் உணவு பெற்று ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கி வருகின்றனர். இவர்களுக்கான மொபைல் கழிவறை சபை அருகே அமைக்கப்பட்டுள்ளது. அவற்றில் சில சேதமடைந்தும், பூட்டப்பட்டும் உள்ளதால் பயன்படுத்த இயலாத நிலையில் உள்ளது. அங்கு தங்கியுள்ள முதியோர், உடல் உபாதை உள்ளோர் இதனால் அவதியடைந்து வருகின்றனர். எனவே சபை அருகே திறந்தவெளியில் தங்கும் பக்தர்களின் நலன் கருதி, மொபைல் கழிவறை அமைப்புகளை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.